நெல்லையில் பா.ஜனதாவினர் மனிதசங்கிலி போராட்டம்
நெல்லையில் பா.ஜனதாவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பா.ஜனதா ஓ.பி.சி. அணி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று மாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். தச்சை தெற்கு மண்டல தலைவர் முருகப்பா, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ஜனதா நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
பஞ்சாப்பிற்கு ரூ.47 ஆயிரத்து 750 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்ற பிரதமர் நரேந்திர மோடியை தடுத்து நிறுத்தி பாலத்தின் மேலே நிற்க வைத்த பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து இந்த மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.