காளமேகப்பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்
காளமேகப்பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்
மதுரை
மார்கழி மாதத்தில் அதிகாலையில் பெருமாள் கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். ஆண்டாளின் ஆழ்ந்த பக்தியை ஏற்றுக்கொண்ட பெருமாள், மார்கழி மாதம் 27-வது நாள் தன்னுடைய பக்தையான ஆண்டாளை தன்னோடு சேர்த்து கொண்டார். இந்த நாள்தான் கூடாரவல்லி உற்சவமாக பெருமாள் கோவில்களில் நடைபெறுகிறது. இதன்படி மதுரை அருகே உள்ள திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் நேற்று கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது. அப்போது திருமணமாகாத பெண்கள், இளைஞர்களும் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ ஆகிய பூஜை பொருட்களை வைத்து வழிபட்டனர். இதன் மூலம் அவர்களுக்கு திருமண தடை நீங்கி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.