மனைவியை கொன்ற பெயிண்டர் சிறையில் அடைப்பு

வடக்கன்குளம் அருகே மனைவியை கொன்ற பெயிண்டர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-01-11 22:03 GMT
வடக்கன்குளம்:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பழவூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி ஜென்சி (37). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுடலையாண்டி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த சுடலையாண்டி தனது மனைவியிடம் செல்போன் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுடலையாண்டி வீட்டில் கிடந்த அரிவாள்மனையால் ஜென்சியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஜென்சி இறந்தார். பின்னர் சுடலையாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜான் பிரிட்ேடா,  சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் தப்பி ஓடிய சுடலையாண்டியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் ஊரில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே சுடலையாண்டி பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று காலையில் அங்கு விரைந்து சென்று சுடலையாண்டியை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்