கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெற கூட்டுறவு கடன் சங்கங்களில் என்.ஓ.சி. கேட்பதைக்கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சூரியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
குண்டடம்
கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெற கூட்டுறவு கடன் சங்கங்களில் என்.ஓ.சி. கேட்பதைக்கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சூரியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கூறப்படுவதாவது:-
முற்றுகையிட்டு போராட்டம்
குண்டடம் அருகே, விவசாயிகள் கடன் பெற கூட்டுறவு கடன் சங்கங்களில் என்.ஓ.சி. கேட்பதைக்கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குண்டடம் அருகேயுள்ள சூரியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.
என்.ஓ.சி. தேவை
இதில் பங்கேற்ற விவசாயிகள் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் கடன் பெற என்.ஓ.சி. தேவை இல்லை என அரசு அறிவித்துள்ள நிலையிலும் சங்க செயலாளர்கள் விவசாயிகளிடம் என்.ஓ.சி. வாங்கி வரச்சொல்லி வற்புறுத்துவதாகவும், இல்லையெனில் கடன் வழங்க முடியாது என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அரசின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காக முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.