மேலும் 253 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.;

Update: 2022-01-11 18:43 GMT
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
 253 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் திடீரென கொரோனா 3-ம் அலை வேகமாக பரவ தொடங்கியது. இதை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திலும் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
கடந்த 7-ந்தேதி தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டிய நிலையில், மறுநாள் 200-ஐ கடந்து தினசரி பாதிப்பு 226-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 253 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 
10 ஆயிரத்தை கடந்தது
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 71-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 73 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 795-ஆக அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,071 பேர் திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை 1029-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்