திருநங்கைகளுக்கு, ரேஷன் கார்டு

தரங்கம்பாடியில் திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.

Update: 2022-01-11 18:24 GMT
பொறையாறு:
தரங்கம்பாடியில் திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
ரேஷன் காா்டு
தமிழ்நாட்டில் உள்ள திருநங்கைகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி மின்னணு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா அறிவுறுத்தலின்படி தரங்கம்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.
 முகாமிற்கு தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து அவர் பொறையாறு அருகே அனந்தமங்கலம் கீழத்தெரு கிராமத்தை சேர்ந்த சுமதி என்ற திருநங்கைக்கு மின்னணு ரேஷன் கார்டு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி, தொடங்கி வைத்தார். முகாமில் வட்ட வழங்கல் அலுவலகம் தனி ஆய்வாளர் மரியஜோசப்ராஜ் மற்றும் தாலுகா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்