அரூரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.90 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ90 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
அரூர்:
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3 ஆயிரம் பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த வாரம் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.9.106 முதல் ரூ.10,820 வரையிலும், வரலட்சுமி (டி.சி.எச்.) ரகம் ரூ.13,106 முதல் 16,129 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.90 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.