நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள்

ஆரணியில் நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.

Update: 2022-01-11 17:07 GMT
ஆரணி

ஆரணியில் நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.

ஆரணியை அடுத்த கொசப்பாளையம் பெரிய சாயக்காரத் தெருவை சேர்ந்தவர் ஏ.எம்.ரஞ்சித். தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர். 

இவரது வீட்டின் பின்பகுதியில் திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டரை 2 வாலிபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டில் வேலை செய்யும் சித்தேரி கிராமத்தை சேர்ந்த பக்தன் என்பவர் அவர்களை பிடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சென்று பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில் அவர்கள் ஆரணி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ஜீவா (வயது 21), கொசப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் தியாகராஜன் (19) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்