சிறந்த 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள்

ராமநாதபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக சிறந்த 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-11 16:54 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக சிறந்த 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
கலை விருதுகள்
 ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 80 கலை ஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-2019 மற்றும் 2021-22-ம் ஆண்டுக்கான கலை விருதுகள் வழங்க ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலை மையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. 
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல் பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம் மானாட்டம் பாம்பாட்டம் குறவன் குறத்தி யாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப ்படுகின்றன.
விருது
18 வயதும் அதற்கு உட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுக்குட்பட்டோருக்கு கலை வளர் மணி, 36 முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கு கலைச்சுடர் மணி, 51 முதல் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு கலைநன்மணி விருது, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கலைமுதுமணி விருது வழங்கப்படுகிறது. 
வயது மற்றும் கலைப்புலமையின் அடிப் படையில் தேர்ந் தெடுக்கப்படும் 5 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய விருதுகள் மாநில விருதுகள் (கலை மாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் கலைஞர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பம் செய்யக் கூடாது. 
விண்ணப்பம்
தகுதியானவர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் அனுபவ சான்றுகளின் நகல்களுடன் உதவி இயக்குனர், மண்டல கலைப்பண்பாட்டு மையம். பாரதி உலா முதல் தெரு, ரேஸ்கோர்ஸ் காலனி, தல்லாகுளம் அஞ்சல், மதுரை-625 002  முகவரிக்கு அடுத்த மாதம் 12-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்