ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-01-11 16:51 GMT
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பலர் முன்கூட்டியே சொந்த ஊருக்கு புறப்பட்டனர். ஏற்கனவே சொந்த ஊருக்கு செல்வதற்காக திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகளும் தற்போது செல்கின்றனர். இதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தொலைதூர ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்