கொடிகாத்த குமரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
நினைவு நாளையொட்டி கொடிகாத்த குமரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நினைவு நாளையொட்டி கொடிகாத்த குமரன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னிமலை
சென்னிமலையில் பிறந்து இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு திருப்பூரில் போலீசாரால் தாக்கப்பட்டு மறைந்த கொடிகாத்தகுமரன் எனப்படும் தியாகி குமரனின் நினைவு தினம் நேற்று சென்னிமலையில் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தியாகி குமரன் பேரவை தலைவர் பி.அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் பேரவையின் கவுரவ தலைவர் டாக்டர் சங்கர், பொருளாளர் என்.சிவகுமார் நடேசன், செயலாளர் டி.சிவசுப்பிரமணியம், பொறுப்பாளர் என்.விசுவநாதன் உள்பட பலர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினனர்.
மேலும் தி.மு.க சார்பில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், மாவட்ட பிரதிநிதி மனோகரன் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டு குமரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சிவகிரி
கொடிகாத்த குமரன் நினைவு நாள் நிகழ்ச்சி சிவகிரியில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு சிவகிரி அண்ணா மேடை அருகே உள்ள தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
எம்.பி.க்கள் ஈரோடு கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டு தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினனர்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கலந்து கொண்டு தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிவகிரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பரமு என்கிற ஆறுமுகம், கொடுமுடி ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
இதேபோல் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் கோபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் வரதராஜன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், கொங்குநடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொடுமுடி ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, கொடிகாத்த குமரன் பேரவை செயலாளர் மீனாட்சி சுந்தரம், துணைத்தலைவர் சுரேஷ் தங்கமணி மற்றும் நிர்வாகிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
----------