ஊசிமலை காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஊசிமலை காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

Update: 2022-01-11 15:20 GMT
கூடலூர்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஊசிமலை காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

ஊசிமலை காட்சிமுனை

கூடலூர் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றது. முதுமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்று வந்தது. இதேபோல் கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் வழியில் ஊசிமலை காட்சிமுனை உள்ளது. 

இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை காட்சிகளை ரசிப்பது வழக்கம். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

அத்துடன் சுற்றுலா மையங்களுக்குள் அனுமதிக்கப்படும் நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. 

வருகை குறைந்தது

இதன் காரணமாக கூடலூரில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அதுபோன்று ஊசிமலை காட்சிமுனைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. 

தற்போது இங்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் பல சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

வியாபாரம் பாதிப்பு

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது சுற்றுலா மையங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதனால் வியாபாரம் குறைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றனர். 

மேலும் செய்திகள்