பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
கோவை
கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனை
கோவை மாவட்டத்தில் 100-க்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 600-யை தாண்டிவிட்டது.
இதை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனாவுக்கு முன்பு கோவை ரெயில் நிலையம் வழியாக தினசரி 72 ரெயில்கள் ஓடின. அதில் தினமும் 25 பேர் பயணம் செய்தனர்.
கொரோனாவுக்கு பிறகு கோவை வழியாக தினசரி 50-க்கும் குறைவாகவே ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் தினசரி சுமார் 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
எனவே ரெயில் மூலம் கோவையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து கோவை வருபவர்களுக்கு கோவை ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வடமாநில தொழிலாளர்கள்
இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது
கோவை மாநகராட்சியில் தற்போது தினசரி 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கோவை ரெயில் நிலை யத்தில் கடந்த 2 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
வடமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் கோவையில் அவர்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
அவர்க ளுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அந்த தனியார் நிறுவனத் திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஸ் நிலையங்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் காந்திபுரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் மக்கள்கூட்டம் அதிகரித்து வருகிறது.
எனவே பஸ் நிலையங்களில் நேற்று மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்,
சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.