கோவையில் 2005 பேர் எழுதினர்

கோவையில் 2005 பேர் எழுதினர்

Update: 2022-01-11 14:27 GMT

கோவை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு கடந்த 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. 

அன்று முழுஊரடங்கு என்பதால் அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கோவையில் ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி, ராஜவீதி துணி வணிகர் சங்க மேல்நிலைப்பள்ளி உள்பட 10 மையங்க ளில்  டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் ஒரு மணி வரை, மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை என 2 பிரிவாக தேர்வு நடைபெற்றது.

தேர்வர்கள், நுழைவு சீட்டை காண்பித்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 முன்னதாக அவர்கள், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து முகக் கவசம் அணிந்து தேர்வு எழுதினர்.

கோவை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத 2,677 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 2005 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 

672 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது விண்ணப்பம் செய்ததில் 75 சதவீதம் பேர் மட்டும் தேர்வு எழுதினர். 

மேலும் செய்திகள்