அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்;

Update: 2022-01-11 13:42 GMT
தூத்துக்குடி:
திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான எஸ்.ஜெயபால் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.எப்ரேம் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். இந்த புகார்களின் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சிவசங்கரன் ஆகியோர் கடந்த 31-ந் தேதி தலைமை ஆசிரியர் எப்ரேமிடம் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியர் ஜெயபாலின் புகார்கள் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுரையின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் எப்ரேமை, கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்