கொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள் தயார்: அமைச்சர் நாசர்

பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 50 படுக்கைகளுடன், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உயர் ரக சிகிச்சை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது.

Update: 2022-01-11 12:52 GMT
இந்த மையத்தில் உள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை ஆய்வகத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்து தேவையான படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் பிளான்ட், மருத்துவர்கள் ஆகியவை சரியான அளவில் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறோம்.இந்த மாவட்டத்தில் 3,924 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

உடன் பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், பூந்தமல்லி சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்