மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

பாளையங்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-01-10 21:32 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் சேதுராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 19). இவர் நேற்று தனது தந்தையுடன் மல்லகுளம் கிராமத்தில் சுவர் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதையொட்டி இரும்பு ஏணியை தூக்கியபோது மின்சார வயரில் பட்டதால் இவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்த அவரை உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்