விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கங்கைகொண்டான் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-01-10 20:04 GMT
நெல்லை:
நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 54). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக சம்பவத்தன்று வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்