சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு அபராதம்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு அபராதம்

Update: 2022-01-10 20:02 GMT
நாகர்கோவில், 
குமரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாகர்கோவில் மாநகரில் தொற்று பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் முககவசம் அணியாத பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள்.  அதன்படி நாகர்கோவிலில் கோட்டார், வடசேரி, கம்பளம், செட்டிகுளம், வடிவீஸ்வரம், ஒழுகினசேரி ஆகிய பகுதிகளில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கோட்டார், வடசேரி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தபோது அங்குள்ள 5 கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காதது தெரியவந்தது.  அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கும் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் முககவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றித்திரிந்த 32 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.6,400 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்