பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
திசையன்விளை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து சென்று விட்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே மன்னார்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அற்புத ஜெபமாலை. இவருடைய மனைவி ரெஜிஸ் மேரி (வயது 77). இவர் மன்னார்புரம் சந்திப்பில் உள்ள கிறிஸ்தவ ஆலய கொடியேற்று விழாவில் பங்கேற்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று ரெஜிஸ்மேரி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.