கிரஷர் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

கிரஷர் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2022-01-10 19:56 GMT
கடையம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே கோட்டவிளைபட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 40). இவர் ஆழ்வார்குறிச்சி அருகே கீழ ஆம்பூர் மெயின் ரோட்டில் தனியார் எம்.சாண்ட் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலையில் எம்.சாண்ட் நிறுவனத்தில் பாறைகளை தூளாக்கும் கிரஷர் எந்திரத்தின் அருகில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிரஷர் எந்திரத்தில் சிக்கிய மாடசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் விரைந்து சென்று, மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாடசாமிக்கு மகேசுவரி என்ற மனைவியும், ஸ்ரீராம் (12), ராகிணி (12) ஆகிய இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்