விழிப்புணர்வு பிரசாரம்

ராஜபாளையத்தில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2022-01-10 19:53 GMT
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின்படி ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் ஆணையின் படி ராஜபாளையம் நகராட்சி சார்பில் ராஜபாளையம் நகர பொது மக்களுக்கு முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வகையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. ராஜபாளையம் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில்  நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிகுரு, காளி, மாரிமுத்து, சுதாகரன், ஆரியங்காவு, பிரபாகரன், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்