விவசாயிக்கு அரிவாள் வெட்டு அணணன்-தம்பி கைது

விவசாயியை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-10 19:51 GMT
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே குருவிகுளத்தை அடுத்த வடக்கு அழகுநாச்சியாபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி (வயது 55), பெருமாள்சாமி (48). அண்ணன்-தம்பியான இவர்கள் விவசாயிகள். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
நேற்று பெருமாள்சாமி தோட்டத்தில் குடும்பத்தினருடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளைச்சாமி, அவருடைய மகன்கள் கோபிநாத் (32), அஜித்குமார் (25) ஆகிய 3 பேரும் பெருமாள்சாமியிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள்சாமிக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான வெள்ளைச்சாமியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்