சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-01-10 19:35 GMT
திருவண்ணாமலை

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 21). இவர் ராணுவ பணியில் சேருவதற்காக பயிற்சிக்கு திருவண்ணாமலைக்கு வந்து சென்று உள்ளார். அப்போது இவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக காதலித்தனர். 

கடந்த செப்டம்பர் மாதம் சிறுமியின் வீட்டில் வைத்து அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 2 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 
இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தயாளனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்