‘வாட்ஸ் அப்’பில் பரவும் வீடியோவால் பரபரப்பு மாற்றுத்திறனாளியை தாக்கும் ஊராட்சி முன்னாள் தலைவர்

மாற்றுத்திறனாளியை தாக்கும் ஊராட்சி முன்னாள் தலைவர்

Update: 2022-01-10 19:35 GMT
கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகில் உள்ள சந்தவாசல் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி கோபி என்பவரை சொத்துத் தகராறால் அதேபகுதியில் வசிக்கும் உறவினரும் சந்தவாசல் ஊராட்சி மன்ற  முன்னாள் தலைவருமான ராஜாமணி தாக்கும் வீடியோ காட்சியோடு, உருக்கமான பதிவும் வாட்ஸ் அப்பில் பரவியது. 

இதுகுறித்து மாற்றுத்திறனாளி கோபியிடம் கேட்டபோது, எனது சொத்துகளை மிரட்டி எழுதி வாங்க ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜாமணி கட்டப்பஞ்சாயத்து மூலம் முயற்சி செய்தார். இதற்கு நான் கட்டுப்படாததால் நேற்று மாலை என்னை ஒரு மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் கீழே தள்ளி தாக்கினார். என்னை குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் தடுத்தும் அவர்  தாக்குதலை நிறுத்தவில்லை. எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம், எனக் கருதி சந்தவாசல் போலீசில் புகார் செய்துள்ளேன், என்றார்.

மாற்றுத்திறனாளியை தாக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவியதால் சந்தவாசல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்