வீடு புகுந்து திருட முயன்றவருக்கு தர்மஅடி

வீடு புகுந்து திருட முயன்றவருக்கு தர்மஅடி

Update: 2022-01-10 19:35 GMT
ஆரணி

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் ஒத்தைவாடை தெருவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் ஓரிரு நாட்களுக்கு முன்பு மர்ம நபர் நுழைந்து திருட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் பிடித்தனர். அவர், ஜட்டி மட்டுமே அணிந்திருந்தார். உடலில் எண்ணெய் தடவி இருந்தார். அவரின் கால்களை கட்டிப்போட்டு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அவர், வேலூர் மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி (வயது 52) என்றும், ராணிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச் வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்