ஆம்பூர் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஆம்பூர்
ஆம்பூர் நகராட்சியில் பல்வேறு வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் தூய்மைப்பணி உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். 162 பேர் தூய்மைப் பணியாளர்களாகவும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களாக 82 பேரும் மற்றும் வாகன ஓட்டுனர்கள் என 259 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு பொங்கல் போனஸ் தொகை, பி.எப். தொகை வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.