புறநகர் ரெயில்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே டிக்கெட்

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே டிக்கெட்;

Update: 2022-01-10 19:34 GMT
அரக்கோணம்

அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் கோவில் அருகில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 227 பேரும், அரிமா சங்க கட்டிடத்தில் நடந்த முகாமில் 86 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும், புறநகர் ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சென்னை புறநகர் ரெயில்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அரக்கோணம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கினர். இதனால் முதல் தவணை செலுத்தி கொண்டு இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்கள் நிலைய வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டு பின்னர் அதற்கான சான்றிதழை காண்பித்து டிக்கெட் பெற்று சென்றனர். 

ரெயில் நிலையத்தில் நடைபெற்ற முகாமில் 126 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமினை அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் பார்வையிட்டு மருத்துவ பணியாளர்களிடம் போதுமான தடுப்பூசி கையிருப்பு குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்