மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தி.மு.க. நிர்வாகி பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தி.மு.க. நிர்வாகி பலியானார்.

Update: 2022-01-10 18:18 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 73). இவர் கிருஷ்ணராயபுரம் தி.மு.க. பேரூர் கழக செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று கிருஷ்ணராயபுரத்தில் இருந்து பாப்பம்பாடி பகுதி கோனிச்சிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து மகாலிங்கம் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்