கண்மாய் மடையில் சிக்கிய சகோதரர்கள் மீட்பு

கமுதியில் மீன்பிடித்த போது கண்மாய் மடையில் சிக்கிய சகோதரர்கள் மீட்கப்பட்டனர்.;

Update: 2022-01-10 18:02 GMT
கமுதி, 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அல்லா பிச்சை தெருவை சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர். இவருடைய மகன்கள் சந்தோஷ் ரகுமான் (வயது 24), அப்துல்கலாம் (20).
இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு என்பதால், பெரிய தர்கா பின்புறம் உள்ள கண்மாய் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். தண்ணீர் செல்லும் மடை பகுதியில் மீன் பிடித்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மடை சரிந்து விழுந்தது. இதில் இருவரும் மடையின் கதவு பகுதியில் சிக்கி கொண்டு தவித்தனர். இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மடையில் சிக்கிய சகோதரர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்