கே என் விஜயகுமார் எம் எல் ஏ வுக்கு கொரோனா
திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கே.என்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.;
அனுப்பர்பாளையம்
திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கே.என்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகுமார் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.என்.விஜயகுமார் (வயது 65). இவர் திருப்பூர் பெரியார்காலனி ஜே.எஸ்.கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.வுக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 3 நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமெடுத்து வரும் சூழலில் அரசியல் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.வுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.