100 அடி உயர கம்பத்தில் பறக்கும் புதிய தேசியக் கொடி

திருவாரூர் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் புதிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Update: 2022-01-10 17:22 GMT
திருவாரூர்:
திருவாரூர் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் புதிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 
தேசியக்கொடி சேதம் 
திருவாரூர் ரெயில் நிலையம் வாசலில் ரெயில்வே துறை சார்பில் புதிதாக 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டது.  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தின விழா அன்று இந்த கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பறந்தது. இந்த தேசியக் கொடி அனைவரது கவனத்தை ஈர்த்தது. மேலும் மனதிற்கு மகிழ்ச்சியும், பெருமிதத்தையும் அளித்து வந்தது. 
வெயில், மழை மற்றும் காற்றினால் கடந்த ஏப்ரல் மாதம் தேசியக்கொடி லேசாக கிழிந்து சேதமடைந்தது. கிழிந்த கொடியை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ரெயில்வே  நிர்வாகம் உடனடியாக கிழிந்த கொடியினை கீழே இறங்கினர். ஆனால் இறக்கப்பட்ட தேசியக் கொடிக்கு பதிலாக புதிய கொடி ஏற்றப்படவில்லை.
புதிய கொடி ஏற்றப்பட்டது
புதிய கொடி ஏற்ற வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் ரெயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 100 அடி உயர கம்பத்தில் புதிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தற்போது இந்த கொடி பறந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்