சரக்கு வேனில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

மன்னார்குடியில், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-10 17:16 GMT
மன்னார்குடி:
மன்னார்குடியில், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தல் 
திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை மதுரை மண்டல கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின்படியும்  துணை கண்காணிப்பாளர் சுதர்சன் அறிவுரையின்படியும் இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையில் போலீசார் நேற்று மன்னார்குடியில் வ.உ.சி. ரோடு அருகே சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. 
2 பேர் கைது
பின்னர் வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை பேட்டை தெருவை சேர்ந்த துரைமாணிக்கம் (வயது49), நெடுஞ்செழியன் (55) ஆகியோர் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் நெல் வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்