திருவாரூர் கடைவீதியில் கரும்பு, வாழைத்தார் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் கரும்பு, வாழைத்தார் விற்பனை நடைபெற்றது.

Update: 2022-01-10 16:51 GMT
திருவாரூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் கரும்பு, வாழைத்தார் விற்பனை நடைபெற்றது. 
கரும்பு, வாழைத்தார் விற்பனை
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகையில் பொங்கல் மிகவும் சிறப்புமிக்கது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று புதுப்பானையில் பச்சை அரிசி வைத்து பொங்கலிட்டு வழிபடுவர். வழிபாட்டில் கரும்பு, வாழை, மஞ்சள் கொத்துக்கள் முக்கிய இடம் பிடிக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதிக்கு கரும்பு, வாழைத்தார், மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் விற்பனைக்காக வந்து குவிந்தன. பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 
வாழைத்தார் ரூ.400-ல் இருந்து ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல்  கரும்பு ஒரு கட்டு ரூ.300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கரும்பு மற்றும் வாழைத்தார் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 
நீடாமங்கலம் 
நீடாமங்கலத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் அமைத்து கரும்பு விற்பனை நடைபெற்றது. ஒரு கட்டு கரும்பு ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. அப்போது பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக பொதுமக்கள் கார்கள், ஆட்டோக்களில் கரும்பு கட்டுகளை வாங்கி சென்றனர். இதேபோல் வாழைத்தார், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்