பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலத்தில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-01-10 16:50 GMT
கோவை வெள்ளலூர் பஸ் நிறுத்தம் அருகே வைக்கப்பட்டு உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவிப்பொடியை தூவி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.
பெரியார் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் நம்பிராஜன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்