திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா
திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் கலந்து கொண்ட உதவி ஆணையர் ரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட 118 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் திருக்கோவில் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோவில் பணியாளர்கள் 12 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.