இளம்பெண் வீட்டில் வழுக்கி விழுந்து சாவு
கயத்தாறு அருகே குழந்தை பெற்ற 10 நாளில் இளம்பெண் வீட்டில் வழுக்கி விழுந்து இறந்து போனார்
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). இவர் கயத்தாறில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனா (28). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு கருவுற்ற மீனாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மீனா படுக்கறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கழிப்பறை செல்வதற்காக எழுந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக படுக்கையில் இருந்து வழுக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாராம். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனராம். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.