அரசு பெண் டாக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா
அரசு பெண் டாக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா பரவல், கடந்த சில வாரங்களாக குறைந்து இருந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் அரசு பெண் டாக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் வசித்து வந்த பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.