மாநில தகவல் ஆணையர் விசாரணை

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2022-01-10 13:29 GMT
தேனி: 


தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். 

இதில், தேனி மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 10 மனுக்கள், திண்டுக்கல்லில் நிலுவையில் இருந்த 11 மனுக்கள், மதுரையில் நிலுவையில் இருந்த 19 மனுக்கள், விருதுநகரில் நிலுவையில் இருந்த 10 மனுக்கள் என மொத்தம் 50 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனுப்பும் மனுக்களுக்கு தாமதமின்றி உரிய பதில் அளிக்க வேண்டும், மேல் முறையீட்டு மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்