கல்லூரி மாணவர் குளத்தில் மூழ்கி பலி

மணிகண்டம் அருகே கல்லூரி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2022-01-09 20:44 GMT
மணிகண்டம்
மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 18). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்ற மாதேஸ்வரன், ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் குளத்திற்குள் இறங்கி நீரில் மூழ்கிய மாதேஸ்வரனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்