அரசு அலுவலகங்களுக்கு நேரில் வருவதை தவிர்த்து கோரிக்கை மனுக்களை தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம்; பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
அரசு அலுவலகங்களுக்கு நேரில் வருவதை தவிர்த்து கோரிக்கை மனுக்களை தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.;
ஈரோடு
அரசு அலுவலகங்களுக்கு நேரில் வருவதை தவிர்த்து கோரிக்கை மனுக்களை தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கூட்டம் ரத்து
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவல் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிராம அளவில் நடத்தப்படும் பட்டா சிறப்பு முகாம், விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம், மனுநீதி நாள் திட்ட முகாம் போன்றன நடைபெறாது என்று சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் மறு உத்தரவு வரும்வரை நடைபெறாது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம். www.gdp.tn.gov.in என்ற இணையதள முகவரி அல்லது sdcssserode@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பங்கள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இணையதள வசதியை பயன்படுத்தி மனுக்களை அனுப்பி வைக்கலாம்.
நேரில் வரவேண்டாம்
கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ஈரோடு மாவட்டத்தை கொரோனா நோய் தொற்று முற்றிலும் இல்லாத மாவட்டமாக மாற்றி அமைக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.