பெருந்துறையில் ஊரடங்கை மீறிய 270 பேருக்கு ரூ.27 ஆயிரம் அபராதம்

பெருந்துறையில் ஊரடங்கை மீறிய 270 பேருக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-01-09 20:37 GMT
பெருந்துறை
பெருந்துறை பகுதியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில் குமார், ஆறுமுகம், கருப்பசாமி, சந்தானம் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், மகேந்திரன், முத்துசாமி, மோகன்ராஜ் ஆகியோர் பெருந்துறை நகர் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்த 270 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.27 ஆயிரம் போலீசார் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்