அரியலூரில் புதிதாக 14 பேருக்கு கொரோனா
அரியலூரில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.;
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 3 பேர் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது மாவட்டத்தில் 46 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.