ரெயில்களில் ஏராளமானோர் பயணம்

ரெயில்களில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

Update: 2022-01-09 19:55 GMT
அரியலூர்:

ஏராளமானவர்கள் பயணம்
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் ெரயில்கள் வழக்கம்போல் இயங்கின. சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து இருமார்க்கத்திலும் அரியலூர் வழியாக செல்லும் பல்லவன், வைகை, குருவாயூர், மங்களூர் மலைக்கோட்டை ஆகிய விரைவு ரெயில்கள் மற்றும் மதுரை - விழுப்புரம், திருச்சி -கடலூர் பயணிகள் ெரயில்கள் வழக்கம் போல் ஓடின. இதில் ஏராளமான பயணிகள் அரியலூர் ெரயில் நிலையத்திலிருந்து ரெயில்களில் பயணம் செய்தனர்.
நேற்று மாலை சென்னையில் இருந்து அரியலூர் வந்த வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயில்களில் வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அரியலூரில் இறங்கினார்கள். வழக்கமாக ெரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஊரடங்கைமுன்னிட்டு பஸ்கள் ஓடாததால் தங்களது சொந்த கார்களில் பலர் பயணம் மேற்கொண்டனர்.
ஆட்டோக்களில் சென்றனர்
மற்றவர்கள் வாடகை ஆட்டோக்களில் சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் மேற்கொண்டு தங்களது ஊர்களுக்கு சென்றனர். 
ெரயில்கள் வந்து சென்ற நேரங்களில் மட்டும் ெரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி சென்றனர். 
மற்ற நேரங்களில் ஆட்டோக்கள் ஓடவில்லை.

மேலும் செய்திகள்