புதுப்பிக்கப்பட்ட நூலகத்தில் கலெக்டர் ஆய்வு

காரியாபட்டி அருகே புதுப்பிக்கப்பட்ட நூலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-09 19:25 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், பிசிண்டி கிராமத்தில் நூலக கட்டிடம் இருந்து வந்தது. இந்த நூலக கட்டிடத்தை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பொது நிதி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், சிவகுமார், பிசிண்டிஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாண்டி பெருமாள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்