ஊருணியில் மூழ்கி வாலிபர் பலி
வெம்பக்கோட்டை அருகே ஊருணியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகில் உள்ள துலுக்கன்குறிச்சியை சேர்ந்த அய்யலுசாமி (வயது 30). கூலி தொழிலாளி. இவர் ஊருணி கரை அருகில் நடந்து சென்ற போது எதிர்பாராமல் தடுமாறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஊருணியில் இறங்கி தேடினர். பின்னர் அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அய்யலுசாமியின் தாயார் கருப்பாயி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.