வியாபாரி தற்கொலை

கல்லிடைக்குறிச்சியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-09 19:12 GMT
அம்பை:

கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் கீழத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 55). சுண்ணாம்பு வியாபாரியான இவருக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்