டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
கரூரில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்களின் நடமாட்டத்தை டிரோன் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
கரூர்,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மாவட்ட போலீசார் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் பேரிகார்டு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களில் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கண்காணித்தனர். மேலும் பொதுமக்களின் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலமும் போலீசார் கண்காணித்தனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கரூர் மனோகரா கார்னர் பகுதி வெறிச்சோடி கிடந்தது.