வாணியம்பாடி, ஆம்பூரில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா
2 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா;
வாணியம்பாடி
வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஒருவர் வாணியம்பாடி கோர்ட்டு பணிக்காக வந்து செல்வார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் நீதிமன்றத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பட் போலீஸ்காரருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் நேற்று போலீஸ்காரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்து, அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதேபோல் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதே போல் மேலும் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வாணியம்பாடியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தடர்ந்து நகராட்சி பணியாளர்கள் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் அதே கட்டிடத்தில் உள்ள ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர்.