வெறையூர் அருகே விவசாயி வீட்டில் 22 பவுன் நகை, பணம் திருட்டு
வெறையூர் அருகே விவசாயி வீட்டில் 22 பவுன் நகை, பணம் திருட்டு
வாணாபுரம்
வெறையூர் அருகே அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 56), விவசாயி. இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். குடும்பத்தினர் பழைய வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று அன்பழகன் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் படுத்து தூங்கி விட்டு தனது பழைய வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. வீடு கட்டுவதற்காக வைத்திருந்த 22 பவுன் நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரத்தை காணவில்லை. மர்மநபர் யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அன்பழகன் வெறையூர் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.